1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 ஜூன் 2025 (10:58 IST)

என்னை இளைய காமராஜர் என்று பேச வேண்டாம்: மாணவ மாணவிகளுக்கு விஜய் வேண்டுகோள்..!

என்னை இளைய காமராசர் என்று பேச வேண்டாம்," என மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார்.
 
 பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இரண்டு கட்டமாக பரிசுகள் வழங்கி கௌரவித்த நடிகர் விஜய், மூன்றாம் கட்டப் பரிசளிப்பு விழாவில் இன்று கலந்து கொண்டார்.
 
மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி கௌரவித்த பின்னர், அவர் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்துவதாகத் தெரிவித்தார். 
 
அதன் பிறகு அவர், "2026 ஆம் ஆண்டு தேர்தல் பற்றியோ, இளைய காமராஜர் என்றெல்லாம் என்னை பற்றிப் பேச வேண்டாம். நீங்கள் பேசுவதற்கு நிறைய உள்ளது. நீங்கள் படித்த பள்ளிக்கூடத்தை பற்றி பேசுங்கள், உங்களுக்கு பாடம் சொல்லித்தந்த ஆசிரியர்கள் குறித்து நிறைய பேசுங்கள். தயவுசெய்து வேறு எதுவும் பேச வேண்டாம்," என்று வேண்டுகோள் விடுத்தார்.
 
Edited by Mahendran