1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 18 ஆகஸ்ட் 2018 (17:11 IST)

என்ன நடக்குமென தெரியவில்லை : நடிகை அனன்யா (வீடியோ)

கேரளாவில் மழை வெள்ளத்தில் சிக்கி பின் மீண்ட நடிகை அனன்யா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

 
கேரளாவில் கடந்து 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் நீரில் மூழ்கி இதுவரை 324 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குடியிறுப்புகளை சுற்றி நீர் சூழ்ந்திருப்பதால் வெளியே வர முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள மக்களை கொட்டும் மழையிலும் ராணுவ  வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில், தமிழில் எங்கேயும் எப்போதும், போராளி, நாடோடிகள், சீடன் உள்ளிட்ட படங்களில் நடித்த அனன்யா, கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வருகிறார். இவர் தனது முகநூல் பக்கத்தில்  வீடியோ வெளியிட்டுள்ளார்.
 
அதில் “என் வீடு முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. என் குடும்பத்தினர் தற்போது நடிகை ஆஷா ஷரத்தின் வீட்டில் இருக்கிறோம். இன்று இரவு பாதுகாப்பாக தூங்க முடியும் என நம்புகிறேன். என் உறவினர்கள் வீடு முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இப்போதுதான் பாதுகாப்பாக உணர்ந்தோம். இந்த மழையால் என்ன நடக்குமெனெ தெரியவில்லை. எல்லாம் கடவுளின் கையில் இருக்கிறது. எங்களை காப்பாற்றியவர்களுக்கு நன்றி. வெள்ளத்தால் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க வேண்டும் என விரும்புகிறேன்” என அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.