மன்னிப்பு கேட்க வேண்டும்.. இல்லையேல்? - ஸ்ரீரெட்டியை எச்சரித்த நானி

Last Updated: செவ்வாய், 12 ஜூன் 2018 (18:48 IST)
நடிகை ஸ்ரீரெட்டி தன் மீது அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் வழக்கை சந்திக்க வேண்டும் என நடிகர் நானி கூறியுள்ளார்.

 
தெலுங்கு சினிமாவில் பாலியல் சீண்டல்கள் அதிகம் இருப்பதாகக் கூறி போராட்டம் நடத்தினார் ஸ்ரீரெட்டி. திடீரென ஒருநாள் அவருடைய போராட்டம் அரை நிர்வாணப் போராட்டமாக மாற, விஷயம் விஸ்வரூபம் எடுத்தது. தெலுங்கு சினிமாவில் உள்ள பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் நடிகைகளுடன் படுக்கையை பகிருந்து கொள்கிறார்கள் என அவர் பகீரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார். அதில், நடிகர் நானியும் ஒருவர் என அவர் கூறியுள்ளார். இவர் ராஜமௌலி இயக்கிய ‘ஈ’ படத்தில் சமந்தாவிற்கு ஜோடியாக நடித்தவர். 
 
தெலுங்கு பிக்பாஸ்-2 வில் ஸ்ரீரெட்டி பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அந்த நிகழ்ச்சியை நடத்தும் நானி, ஸ்ரீரெட்டி பங்கேற்றால் இந்த நிகழ்ச்சியை நடத்த மாட்டேன் எனக்கூறிவிட்டதால், ஸ்ரீரெட்டி கழட்டிவிடப்பட்டார் என செய்திகள் வெளியானது. மேலும், நானியை பற்றி வெளியே கூறிவிட்டதால் என்னுடைய அனைத்து சினிமா வாய்ப்புகளையும் அவர் தடுக்கிறார் என ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டி வருகிறார். அதோடு, நானி தன்னுடன் பகிர்ந்துகொண்டார் என பகீரங்க புகார் கூறியுள்ளார்.

 
‘நீ ஒருத்தருக்கு பிறந்திருந்தால், உன் குடும்பம் பத்திரமாக இருக்க வேண்டும் என நீ விரும்பினால் நீ என்னுடன் படுக்கையை பகிரவில்லை என உன் குடும்பத்தார் மற்றும் கேரியர் மீது சத்தியம் சாய் பார்ப்போம்’ என நானிக்கு ஸ்ரீரெட்டி சவால் விட்டுள்ளார். இல்லையெனில் நான் சாபம் விட்டு விடுவேன் எனவும் அவர் கூறியுள்ளார். 
 
இந்நிலையில், ஸ்ரீரெட்டிக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். என் மீது அபாண்டமாக குற்றம் சாட்டியிருக்கிறீர்கள். 7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் சட்டப்படி வழக்கை சந்திக்க நேரிடும் என அந்த நோட்டீஸில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த விவகாரம் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :