1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 15 மே 2018 (18:14 IST)

ஸ்ரீரெட்டி போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த ராம் சரண்

பாலியல் சீண்டலுக்கு எதிரான ஸ்ரீரெட்டி போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ராம் சரண். 
தெலுங்கு சினிமாவில் பாலியல் சீண்டல்கள் அதிகம் இருப்பதாகக் கூறி போராட்டம் நடத்தினார் ஸ்ரீரெட்டி. திடீரென ஒருநாள் அவருடைய போராட்டம் அரை நிர்வாணப் போராட்டமாக மாற, விஷயம் விஸ்வரூபம் எடுத்தது. இந்நிலையில், சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ரங்கஸ்தலம்’ படத்தின் வெற்றி  விழாவில், ராம் சரணிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
 
“நான் ஸ்ரீரெட்டியை மட்டும் குறிப்பிட்டுப் பேச விரும்பவில்லை. ஆனால், எல்லாத் துறைகளிலும், எல்லா இடங்களிலும் இந்த வார்த்தையைக் கேட்க முடிகிறது. அது அரசியல், பிசினஸ்… என எதுவாக இருந்தாலும் சரி. இதை யாருமே ஆதரிப்பதில்லை.
அதுவும் குறிப்பாக, நான் ஆதரிப்பதே இல்லை. காரணம், என்னுடைய 5 சகோதரிகள் இதே சினிமாத்துறையில் தான் இருக்கிறார்கள். சினிமாத்துறையையே அழித்துவிடும் இந்தச் செயல் இனிமேலும் தொடரக்கூடாது என விரும்புகிறேன்” என அதற்குப் பதில் அளித்துள்ளார் ராம் சரண்.