செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (21:50 IST)

பிரதமரை குடும்பத்துடன் சந்தித்த பிரபல நடிகர்! வைரலாகும் புகைப்படம்

பிரதமர் மோடியை அவ்வப்போது தமிழ் திரையுலகினர் உள்பட இந்திய திரையுலகினர் பலர் குடும்பத்துடன் மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது பிரபல தெலுங்கு நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான மோகன்பாபு அவர்கள் இன்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.
 
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் கூடியிருப்பதாவது: உங்களையும் உங்கள் குடும்பத்தினர்களையும் இன்று சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நாங்கள் இருவரும் பலவிதமான விஷயங்கள் குறித்து சில நிமிடங்கள் அலசி ஆராய்ந்தோம். குறிப்பாக சினிமாவில் உள்ள முக்கியத்துவம் மற்றும் பிரச்சினைகள் குறித்து மிகவும் ஆழமாக பேசினோம் 
 
மேலும் சமூக கலாசாரம் குறித்த விஷயங்களையும் மோகன்பாபுவின் மகன் பாபு உடன் கலந்து ஆலோசித்தேன் என்று பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது மோகன் பாபுவின் மனைவி மற்றும் நடிகையுமான லட்சுமி மஞ்சு, மகன் ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியுடன் மோகன்பாபு குடும்பத்தினர் சந்தித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது