1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2024 (06:30 IST)

இந்த ராசிக்காரர்களுக்கு சோதனைகள் சாதனைகளாக மாறும்! – இன்றைய ராசி பலன்கள்(04.01.2024)!

astro
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


 
மேஷம்
இன்று பாராட்டுகளைப் பெறும் நாள். லாபங்கள் பெருகும். தடைபட்ட சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். புதிய கடன்கள் இனி ஏற்படாது. இருக்கும் கடன் சுமையும் குறையும். வெளிநாடு செல்லும் திட்டம் வெற்றி பெறும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி, சம்பளம் உயரும். நீங்கள் விரும்பிய இடமாறுதலும் கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

ரிஷபம்
இன்று சிக்கல்கள் தோன்றினாலும் அதை வெற்றி கொள்ளும் நாள். செயல்களை செம்மையுற திருத்தமாக செய்வீர்கள். குருபகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உலா வருகிறார். உங்களுக்கு அற்புதமான நல்ல பலன்கள் கிட்டும். வசதிகள் ஓங்கும். புதிய சொத்துகள் சேரும். வெற்றிகளை சுவைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

மிதுனம்
இன்று மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

கடகம்
இன்று பொதுவாக தொல்லைகளும் பிரிவினையும் நீங்கி ஒற்றுமையும் உயர்வும் ஏற்படும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு். பிள்ளைகளின் வளப்பின் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

சிம்மம்
இன்று வாழ்நாள் முழுவதும் ஏற்படவிருக்கும் கஷ்டங்களை அறியாமல் தவறான முடிவுகளில் இறங்க வேண்டாம். புதைபொருள் ஆராய்ச்சியில் உள்ளவர்கள் அரிய முயற்சிகளில் வெற்றி பெறுவர். குடும்பங்களில் குழந்தை பாக்யம் சந்தோஷப்படுத்தும். அரசுத் துறையில் பணி இடை நீக்கம் பெற்றவர்கள் மீட்சி பெறுவர்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கன்னி
இன்று பல பிரச்னைகள் ஒரே நேரத்தில் சிரமம் தந்தாலும் ஏற்றுக் கொண்டு முயற்சியினால் வெற்றிகளை ஈட்டுவீர்கள். ரியல் எஸ்டேட் துறையினர் முன்னேற்றம் காண்பர். எதிலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். கிடைக்கப் பெற்ற பணத்தை தவறான வழிகளில் முதலீடு செய்ய நேரும். ஆகவே மிகுந்த எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

துலாம்
இன்று வழக்குகள் வெற்றியை தரும். புதிய வீடு கட்டும் முயற்சி நிறைவேறும். வாகனம் வாங்குவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிப்பதால் வியாபாரிகளின் லாபம் பெருகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

விருச்சிகம்
இன்று எதிர்பார்த்த பணவரவுகள் குறித்த காலத்தில் கிடைக்கப் பெறாது. பெற்றோர் சம்மதிக்காத திருமணங்களை இந்த காலத்தில் தள்ளிப் போடுவது நல்லது. அரசியல்வாதிகள் தங்கள் நிலையை கருத்தில் கொள்வதோடு வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

தனுசு
இன்று சற்று நிதானமாக செயல்பட வேண்டிய நாள். எவரைப் பற்றியும் எதிர்மறை கருத்துக்களை வெளியிடாதீர்கள். குடும்பத்தில் பிரிவு ஏற்படலாம். தற்செயலான விபத்துக்களை சந்திக்க நேரும். உணவு விஷயத்தில் கடும் எச்சரிக்கை தேவை. இரவு, அதிகாலை நேரங்களில் பிரயாணங்களை தவிர்க்க வேண்டும். சாலைவழி உணவிடங்களில், நேரம் தாண்டி இரவு உணவு உட்கொள்ள வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

மகரம்
இன்று குழந்தைகளால் நன்மை பெறுவீர்கள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். பொன், பொருள் சேரும். மனதில் அமைதி குறையும். எல்லா விதத்திலும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். பங்கு மார்க்கெட் நல்ல லாபத்தை தரும். அரசியல்வாதிகளுக்கு பெண்கள் உதவியால் உயர் பதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கும்பம்
இன்று பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்கவும். யாருடைய தூண்டுதலுக்கும் செவி சாய்க்காதீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல விதமாக பண வசதிகள் அனைத்தும் வேண்டியபடி கிடைக்கும். தடைப்பட்டு பாதியில் நின்ற தொழில் கட்டுமானம் தற்போது முடிவடையும். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளை வசமாக்கும் நூதன கவர்ச்சி தெரியும். அனைவரும் உங்கள் வழிக்கு வருவார்கள். எதையும் தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9

மீனம்
இன்று உடல்நிலை சீராகும். சகோதரச் சண்டைகள் தீரும். அரசுத் தேர்வுகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டுவர். அலுவலகப் பெண்களுக்கு அதிகாரம், பதவியில் உள்ளவர்களின் ஆரோக்யமான உதவிகள் கிடைக்கும். இதனால் பல வசதிகளை அடையலாம். எதிர்பாராத பண உதவிகளும் கிடைக்கும். கடும் ஜுரம், விவாதங்கள், கலகம், அடுத்த வீட்டாருடன் சதா சண்டை இவை நேரும். கவனமாக இருக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6