செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2019 (19:35 IST)

நான் மோடியை பத்தி எதுவும் சொல்லமாட்டேன்! – வாய் திறக்காத அபிஜித்!

நோபல் பரிசுப்பெற்ற அபிஜித் பானர்ஜி இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.

2019ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி இந்தியாவின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் பொருளாதார நிலை குறித்து அதிகமாக விமர்சித்தவர். இந்நிலையில் அவர் பிரதமர் மோடியை சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரதமர் மாளிகையிலிருந்து வெளியேறிய அவரை பத்திரிக்கையாளர்கள் கூடி பல கேள்விகள் கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர் “பிரதமர் என்னை அழைத்து பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதுபோக நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்னார் ‘பத்திரிக்கையாளர்கள் எனக்கு எதிராக உங்களை கருத்து கூற வைக்க முயற்சிப்பார்கள்’ என்று! தற்போது பிரதமரும் டிவியைதான் பார்த்து கொண்டிருப்பார். நீங்கள் என்ன கேட்பீர்கள் என்பது அனைத்தும் அவருக்கு தெரியும். அதனால் நான் உங்களுக்கு எதுவும் சொல்லப்போவதில்லை’ என கூறியுள்ளார்.

பிரதமரின் பல்வேறு திட்டங்களை விமர்சித்தவர் என்பதால் அவரை ஏதாவது பேச வைத்துவிடலாம் என்று எண்ணி சென்ற பத்திரிக்கையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.