திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (14:30 IST)

2024 அல்லது 2026ல் பாஜக தமிழகத்தை ஆளும்! – அண்ணாமலை உறுதி!

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் பல இடங்களில் பாஜக வென்றுள்ள நிலையில் விரைவில் தமிழகத்திலும் பாஜக வெல்லும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்து முடிந்தது. தற்போது 5 மாநிலங்களுக்கும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

பஞ்சாபில் ஆம் ஆத்மி பெருவாரியான தொகுதிகள் முன்னிலையில் உள்ள நிலையில், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட ஏனைய மாநிலங்களில் பாஜக பெருவாரியான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “தேசிய அளவில் பாஜக மிகப்பெரும் கட்சி என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. பாஜகவின் வளர்ச்சி அரசியலை மக்கள் வரவேற்கின்றனர். கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதே உத்தர பிரதேசத்தில் பாஜக வெல்ல முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தமிழகத்திலும் பாஜக ஆட்சிக்கு விரைவில் வரும். அது 2024 ஆ? அல்லது 2026 ஆ என்பது தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.