1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (14:05 IST)

கெஜ்ரிவால் பிரதமர் நாற்காலியில் அமர்வார் - ஆம் ஆத்மி அட்ராசிட்டி!

அரவிந்த் கெஜ்ரிவால் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக உருவெடுத்துள்ளார் என ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சதா பேட்டி.

 
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்து முடிந்தது. தற்போது 5 மாநிலங்களுக்கும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
 
தற்போதைய நிலவரப்படி பஞ்சாபில் அநேக இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது. 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாபில் பெரும்பான்மைக்கு 59 இடங்கள் தேவையான நிலையில் ஆம் ஆத்மி கட்சி 91 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான காங்கிரஸ் 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
 
இதனால் பஞ்சாபை ஆம் ஆத்மி கைப்பற்றுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சதா கூறுகையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை அமைக்க தயாராக உள்ளோம். ஆம் ஆத்மி ஒரு மாநிலத்தில் மட்டும் வெற்றி பெறவில்லை. அது ஒரு தேசிய கட்சியாக மாறியுள்ளது. நாட்டில் காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி மாறும்.
 
அரவிந்த் கெஜ்ரிவால் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக உருவெடுத்துள்ளார். நிச்சயமாக அவர் விரைவில் பிரதமர் நாற்காலியில் அமர்வார். ஒரு மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க 10 ஆண்டுகள் ஆனது. ஆனால் ஆம் ஆத்மி கட்சி தொடங்கி பத்து ஆண்டுகள் கூட ஆகவில்லை. இரண்டு மாநிலங்களில் நாங்கள் ஆட்சி அமைக்கிறோம் என்று கூறியுள்ளார்.