மதவெறிக்கு எதிராக பஞ்சாப் மக்கள்… இதுபோதும் எனக்கு..! – தோற்றும் மகிழ்ந்த அமரீந்தர் சிங்!
பஞ்சாபில் தனிக்கட்சி தொடங்கி தோற்ற அமரீந்தர் சிங் மக்கள் முடிவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்து முடிந்தது. தற்போது 5 மாநிலங்களுக்கும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி பஞ்சாபில் அநேக இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது. 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாபில் பெரும்பான்மைக்கு 59 இடங்கள் தேவையான நிலையில் ஆம் ஆத்மி கட்சி 91 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான காங்கிரஸ் 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸிலிருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கிய முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தான் போட்டியிட்ட பட்டியாலா தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளார்.
இந்நிலையில் ஆம் ஆத்மி வெற்றி குறித்து பேசிய அமரீந்தர் சிங் “மக்களின் தீர்ப்பை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது. மதவெறி மற்றும் சாதியத்திற்கு எதிராக வாக்களித்ததன் மூலம் பஞ்சாபியர்கள் தங்களது உண்மையான உணர்வை காட்டியுள்ளனர்” என்று கூறியுள்ளார்.