வாக்காளர் அடையாள அட்டை- ஆதார் எண் இணைக்கும் மசோதா: இன்று தாக்கல்!
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது
கள்ள ஓட்டுக்களை தவிர்ப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க ஒப்புதல் அளித்தது
இந்த நிலையில் இன்று இதுகுறித்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே சமயத்தில் வாக்காளர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும், கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தேர்தல் அதிகாரி ஏன் ஆதார் எண்ணை இணைக்க வில்லை என்று கேள்வி கேட்டால் அதற்கு சரியான காரணம் கூற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது
இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த மசோதாவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது