1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 27 டிசம்பர் 2017 (18:18 IST)

பேஸ்புக் பயன்படுத்தவும் ஆதார் கட்டாயம்??

சர்வதேச அளவில் நாள் ஒன்றுக்கு சுமார் 200 கோடி பயன்பாட்டாளர்களை கொண்டது பேஸ்புக். இந்நிலையில் இதில் உள்ள, போலி அக்கவுண்ட்களை முடக்க, ஆதார் எண்ணை பேஸ்புக் அக்கவுண்டில் இணைக்கும் முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
 
போலியான அக்கவுண்டகள் பயன்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனத்துக்கு பலன் புகார்கள் சென்றுள்ளது. இதனால், புதிதாக அக்கவுண்ட் உருவாக்கும் போது ஆதார் எண்களை இணைக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. 
 
புதிதாக பேஸ்புக் அக்கவுண்ட் உருவாக்க முயற்சிக்கும் போது ஆதார் அட்டையில் உள்ள பெயரை பதிவு செய்யும்படி கேட்கிறது. ஆனால் ஏற்கனவே பேஸ்புக் பயன்படுத்துவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என இதுவரை தெரிவிக்கவில்லை. 
 
அதேபோல், மொபைல் அப்ளிகேஷன் மூலமாக பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கும் இதுவரை ஆதார் எண் கேட்கப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் பேஸ்புக் பயன்படுத்தும் அனைவரும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதே பேஸ்புக் நிறுவனத்தின் திட்டமாக தெரிகிறது.
 
இந்த திட்டங்கள் அனைத்தும் ஒரு சோதனையாக மேற்கொள்ளபட்டு வருகிறது. இது வெற்றி அடையும் பட்சத்தில் இந்த திட்டத்தை மேலும் பாதுகாப்பான ஒன்றாக உருவாக்கப்படும் என தெரிகிறது.