வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (13:43 IST)

நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றிவிட்டு உயிர் நீத்த பெண்

டெல்லியில் ஒரு குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் நூற்றுக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றிய இளம்பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
டெல்லி குர்கானில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன் தினம் தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டது நள்ளிரவு என்பதால் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர்.
 
இதனையறிந்த 5வது மாடியில் குடியிருந்த ஸ்வாதி கார்க்(32) என்ற பெண், துரிதமாக செயல்பட்டு அந்த குடியிருப்பில் இருந்தவர்களின் வீட்டை தட்டி அனைவரையும் வெளியேற்றினார்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 
இதனிடையே 100க் கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றிய கார்க், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏறொபடுத்தியுள்ளது.