புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 7 அக்டோபர் 2018 (18:46 IST)

இந்தோனேஷிய நிலநடுக்கம்: 1800 பேர் உயிரிழப்பு; 5000 பேர் மிஸ்சிங்

இந்தோனேஷியாவில் சுனாமி மட்டும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1800க உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 5 அடி உயரத்தில் பயங்கர ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது. இதனால் பல கட்டிடங்களும், கார்களும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. 

கடற்கரை திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான மக்கள் சுனாமியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் சுனாமி மற்றும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5000க்கும் மேற்பட்டோர் காணவில்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.