திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 9 ஜூலை 2018 (11:33 IST)

கட்டிய மனைவியை எம்.எல்.ஏவிற்கு விருந்தாக்கிய கணவன்

அசாமில் புருஷனே தன்னை எம்.எல்.ஏவுடன் தவறான உறவில் ஈடுபடுத்தியதாக ஒரு பெண் புகார் கூறியுள்ளார்.
நாட்டில் பெண்கள் மீதான பாலியல் இச்சைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசும் எவ்வளவு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், பாலியல் குற்றங்களை செய்யும் அயோக்கியன்கள் தொடர்ந்து தங்களது லீலைகளை தொடர்ந்து வருகின்றனர்.
 
இந்நிலையில் அசாமை சேர்ந்த பெண் ஒருவர் ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி எம்.எல்.ஏ நிஜாம் உத்தின் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார்.
அதில் என் கணவன் என்னை வலுக்கட்டாயமாக எம்.எல்.ஏ நிஜாம் உத்தினுடன் உறவு கொள்ள வற்புறுத்தினார். என்னை நிஜாம் பலவந்தப்படுத்தி பல முறை கற்பழித்தார் என எம்.எல்.ஏ மீது அப்பெண் புகார் அளித்துள்ளார். எம்.எல்.ஏ மீது வழக்கு பதிந்துள்ள போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.