1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (12:37 IST)

இந்தியாவுக்கென தனி கிரிப்டோ கரன்சி: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்தியாவுக்கென தனி கிரிப்டோ கரன்சி: அமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்தியாவுக்கு என தனி கிரிப்டோகரன்சி ஏற்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார் 
 
உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும் இந்தியாவில் கிரிப்டோகரன்சி இதுவரை அனுமதி இல்லை என்றாலும் ஏராளமான இந்தியர்கள் அதில் முதலீடு செய்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்தியாவுக்கு என தனி கிரிப்டோகரன்சி உருவாக்கப்படும் என்றும் இந்த பிரத்யேக கிரிப்டோகரன்சி இந்த ஆண்டு ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் பணம் வழங்க அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் 
 
டிஜிட்டல் பணத்திற்கு என புதிய மத்திய வங்கி ஏற்படுத்தப்படும் என்றும் 25 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி மையங்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்