‘தேங்க்யூ’ கூறினால் தள்ளுபடி: ஐதராபாத்தில் ஒரு அதிசய உணவகம்!
‘தேங்க்யூ’ கூறினால் தள்ளுபடி: ஐதராபாத்தில் ஒரு அதிசய உணவகம்!
தேங்க்யூ என்று கூறினால் பில்லில் சலுகை தரப்படும் என்ற ஹைதராபாத் உணவகம் ஒன்றின் அறிவிப்பு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
ஒரு உதவியை செய்பவர்களுக்கு ‘தேங்க்யூ’ என்றும் ஒரு உதவியை செய்ய கூறுபவர்கள் ப்ளீஸ் என்றும் கூறுவது அனைவரும் வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில்தான் ‘தேங்க்யூ’ மற்றும் ப்ளீஸ் ஆகிய வார்த்தைகளை கூறும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி அளிக்கப்படும் என ஹைதராபாத்தை சேர்ந்த உணவகம் தெரிவித்துள்ளது
ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான ’தக்ஷின் 5’ என்ற உணவகம் தான் இந்த புதிய முயற்சியை எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களிடையே ‘தேங்க்யூ’ மற்றும் ப்ளீஸ் ஆகிய வார்த்தைகளை அதிகம் பேச வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதை அடுத்து இந்த உணவகத்திற்கு இணையதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது