புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 9 அக்டோபர் 2019 (08:36 IST)

பள்ளிக்கரணையை மிரட்டிய சுக்குக் காப்பி திருடர்கள் – சிக்கியது எப்படி ?

சென்னையில் உள்ள பள்ளிக்கரணை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுக்குக் காபி விற்பவர்கள் போல வீடுகளை நோட்டம் பார்த்து கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கரணை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்ற சில திருட்டு சம்பவங்களில் கிட்டத்தட்ட 100 பவுன் நகை வரை திருடுப் போனது. இதையடுத்து வந்த புகார்களின் பேரில் போலிஸார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். இதையடுத்து அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த போலிஸார் சுரேஷ், சூர்யவிக்ரம் மற்றும் சீனிவாசன் ஆகியோரைக் கைது செய்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தைச் சேர்ன்ய்ஜ ஒருவர் தப்பித்துச் சென்றுள்ளார்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் தாங்கள் அப்பகுதியில் சுக்குக் காபி விற்பது போல வீடுகளை நோட்டம் பார்த்து கொள்ளையடித்து வந்ததாக ஒத்துக்கொண்டுள்ளனர்.