1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 15 மே 2024 (15:55 IST)

கணவரை விட்டு காதலுடன் சென்ற கர்ப்பிணி பெண்.! குடும்பத்தை நாசமாக்கிய இன்ஸ்டா பழக்கம்!

Girl
கேரளாவில் தனது கணவர் மற்றும் நான்கு வயது மகனை விட்டு விட்டு காதலனுடன் நாட்டை விட்டு கர்ப்பிணி பெண் தப்பிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. மேலும், அந்த பெண் தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
 
இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வடகரையைச் சேர்ந்த இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் தகாத உணவாக மாறியது. இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி மாலை காருடன் வந்த அந்த இளைஞர், அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
 
இதனிடையே தனது மனைவியை 10-ம் தேதி முதல் காணவில்லை என்று அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
இதற்கிடையே வடகரையைச் சேர்ந்த இளைஞருடன், கர்ப்பிணி பெண் காவல் நிலையத்தில் ஆஜரானார். இதையடுத்து அவரது கணவர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையம் வரவழைக்கப்பட்டனர். அப்போது தன் காதலுடன் செல்வதாகவும், கணவருடன் இருக்கப் பிடிக்கவில்லை என்று அந்தப் பெண் தெரிவித்தார்.

 
பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்குப் பின் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர். கணவர் மற்றும் மகனை விட்டுவிட்டு கர்ப்பிணி பெண் காதலனுடன் தப்பி ஓடிய சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.