1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. college girl fired herself in beach

காதலனுடன் கடற்கரைக்கு சென்ற காதலி.. திடீரென தீக்குளித்ததால் பரபரப்பு..!

பூம்புகார் கடற்கரை
காதலனுடன் பூம்புகார் கடற்கரைக்குச் சென்ற காதலி திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மயிலாடுதுறை சேர்ந்த ஆகாஷ் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சிந்துஜா என்பவரை காதலித்து வந்தார். இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் ஆகாஷை சிந்து சந்தேகப்பட்டதாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் கடற்கரைக்கு இருவரும் சென்ற நிலையில் அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் நீ வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறாய் என்று சிந்துஜா சண்டை போட்டதாகவும் தெரிகிறது.
 
இந்த நிலையில் திடீரென சிந்துஜா மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தன் முன்னே காதலி தீக்குளித்ததால் அதிர்ச்சி அடைந்த ஆகாஷ் அவரை காப்பாற்ற முயன்றபோது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. 
 
இதனை அடுத்து இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
நீட் பயிற்சி மாணவர் திடீர் மாயம்.. தேட வேண்டாம் என மெசேஜ் அனுப்பியதால் பெற்றோர் அதிர்ச்சி..!