வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2022 (14:42 IST)

பேருந்தின் கண்ணாடியை தலையால் முட்டி உடைத்த நபரால் பரபரப்பு

kerala
கேரள மாநிலம் மலப்புரத்தில்  பேருந்தின் கண்ணாடியை தலையால் முட்டி உடைத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் மலப்புரம் மாவட்டம் பெருங்கல் மன்னார் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த பேருந்தை நோக்கி ஓடி வந்த   நபர் பேருந்தின் கண்ணாடியை தலையால் முட்டினார். இதில், முன்பக்க  சில்லு சில்லாக கண்ணாடி உடைந்து  நொறுங்கி, அவர் சாலையில்  தூக்கி வீசப்பட்டார்.

அதன்பின்னர், அவர்,  ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து எழுந்திருக்க மறுத்தார். இதுகுறித்து விசாரணையில், அவர்  பிரேசில் நாட்டைச் சேர்ந்த நெய்மரின் தீவிர ரசிகர் என்றும், அப்பேருந்தின் அர்ஜென்டினா நாட்டின் கொடியின் வண்ணம் இருந்ததால், அவர் இந்தச் செயல் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

மேலும், அவர் பெயர் ராஜேஷ், அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பதால்  அவர் மன நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Edited by Sinoj