வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 8 ஆகஸ்ட் 2018 (08:51 IST)

சாமியாரின் பேச்சைக்கேட்டு பெத்த மகளை கொன்று புதைத்த பெற்றோர்

சாமியார் ஒருவரின் பேச்சைக்கேட்டு தம்பதியினர் ஒருவர், தங்களது மாற்றுத்திறனாளி மகளை கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் சௌதார்புர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தாபால் என்பவருக்கு 6 வயதில் தாரா என்ற மகள் இருந்துள்ளார். 
 
ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தாரா மருத்துவ சிகிச்சை அளித்த போதிலும் அவரது  உடல் நிலை முன்னேறவில்லை.
 
இதனால் சிறுமியின் பெற்றோர் ஒரு மந்திரவாதியை நாடியுள்ளனர். அந்த மந்திரவாதி உங்கள் மகளை கொன்று விட்டால், அடுத்து ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என கூறியுள்ளார்.
 
சாமியாரின் பேச்சைக்கேட்ட பெற்றோர் தங்களது மகளுக்கு 5 நாட்களாக உணவு, குடிநீர் எதுவும் கொடுக்காமல் அவரைக் கொன்று, வீட்டின் பின்புறம் குழி தோண்டி சடலத்தை புதைத்துள்ளனர். 
 
சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், போலீஸாரிடம் புகார் அளித்தனர். விரைந்து வந்த காவல் துறையினர் ஆனந்தாபாலிடம் விசாரணை நடத்தியதில், பெற்ற மகளை கொன்று புதைத்திருப்பது தெரியவந்தது.
 
போலீஸார் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் ஆனந்தாபால், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.