அம்மாடியோவ்..! புனேவில் உருவான கொசு சூறாவளி! பீதியில் மக்கள்! – வீடியோவை நீங்களே பாருங்களேன்..!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஆற்றுப்பகுதியில் ஆயிரக்கணக்கான கொசுக்களுடன் உருவான சூறாவளி அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
வளிமண்டல வெப்பநிலை மாற்றம், காற்று சூடாவதன் காரணமாக சூறாவளி ஏற்படுகிறது. மணல் சூறாவளி, கடலில் உருவாகும் நீர் சூறாவளி என பலவகை சூறாவளிகளை பார்த்திருப்போம். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் வித்தியாசமாக பல்லாயிரக்கணக்கான கொசுக்கள் உள்ள சூறாவளி ஒன்று உண்டாகியுள்ளது.
புனேவில் உள்ள முலா முதா ஆற்றில் இந்த சூறாவளி உருவாகியுள்ளது. சாதாரணமாக உருவான இந்த சூறாவளியில் ஆற்றின் மேற்படுகையில் இருந்த ஏராளமான கொசுக்களும் இழுக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான கொசுக்கள் சூழ்ந்த கொசு சூறாவளியாக மாறியுள்ளது.
இதை கண்ட அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த சூறாவளி மக்கள் வசிக்கும் பக்கம் வந்தால் இந்த ஆயிரக்கணக்கான கொசுக்களும் மக்கள் வாழ்விடங்களில் புகுந்து விடும். இதனால் அப்பகுதி மக்கள் ஏராளமான உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும். அதனால் இந்த சம்பவம் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கொசு சூறாவளி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Edit by Prasanth.K