1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 பிப்ரவரி 2024 (08:37 IST)

மரண தண்டனை விதிக்கப்பட்ட கடற்படையினர் விடுதலை! – கத்தாரிலிருந்து இந்தியா திரும்பினர்!

navy soldiers
உளவு பார்த்ததாக கூறி கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கப்பற்படை வீரர்களை கத்தார் அரசு விடுதலை செய்துள்ளது.



இந்திய கப்பற்படையில் பணியாற்றிய முன்னாள் வீரர்கள் 8 பேர் கத்தாரில் உளவு வேலைகளை செய்து வந்ததாக சில மாதங்கள் முன்னதாக கத்தார் அரசால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது அங்கு விசாரணை நடந்த நிலையில் அவர்கள் உளவு பார்த்ததற்காக மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் வீரர்களை காப்பாற்ற வேண்டுமென அவர்களது குடும்பத்தார் இந்திய அரசிடம் கேட்டுக் கொண்டனர். கத்தாரின் இந்த முடிவு குறித்து இந்திய அரசு கத்தாருடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களையும் கத்தார் அரசு விடுவித்துள்ளது. 8 பேரும் பாதுகாப்பாக இந்தியா அழைத்துவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K