வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2019 (20:42 IST)

சலாம் ராக்கி பாய்! பைக்கில் போகும் பெரிய குடும்பம் – வைரல் விடியோ

ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் போவதே சட்டப்படி தவறு என போக்குவரத்து காவலர்கள் கடுமையாக நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் மனைவி, பிள்ளைகள், வளர்ப்பு நாய்க்குட்டிகள் என ஒரு பெரிய குடும்பமே ஒரு பைக்கில் பயணிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ரிஷாட் கூப்பர் என்ற நபர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் பைக் ஒன்றை ஆண் ஒருவர் ஓட்டி செல்கிறார். பின்னால் அவரது மனைவியும் 3 மகன்களும் அமர்ந்திருக்கின்றனர். இரண்டு மகன்கள் வண்டிக்கு முன்னால் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்திருக்கிறார்கள். ஒரு நாய்க்குட்டி பைக்கின் பக்கவாட்டில் உள்ள துணி மூட்டை மீதும், மற்றொரு நாய்க்குட்டி முன்னால் அமர்ந்திருக்கும் சிறுவனோடும் இருக்கிறது.

அந்த வீடியோவை பார்க்கும்போது மொத்தமாக எங்கோ அவர்கள் குடிப்பெயர்ந்து போவது போல் தெரிகிறது. அவர்கள் வாகனத்தில் பயணித்தபோது அந்த வழியாக பைக்கில் சென்ற ஒரு நபர் அதை வீடியோ எடுத்துள்ளார். அதற்கு சினிமா பாடல் ஒன்றை இணைத்து வெளியிட்டுள்ள அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. அதேசமயம் ஹெல்மெட் போடாமல் போனாலே அபராதம் விதிக்கும் இதே ஊருக்குள்தான் இந்த மாதிரி குடும்பமே சென்று கொண்டிருக்கிறது என்று சிலர் கூறியுள்ளனர்.