செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 ஜூன் 2020 (07:01 IST)

விவாகரத்து கேட்டு மனைவி, மாமியாரை கொலை செய்த வாலிபர்: எஸ்கேப் ஆன மாமனார்

விவாகரத்து தராததால் மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்த வாலிபர் ஒருவரால் பெங்களூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பெங்களூரைச் சேர்ந்த அமித் அகர்வால் என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டார். இதனையடுத்து விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால் விவாகரத்துக்கு மனைவி சம்மதிக்கவில்லை என்றும் அதற்கு காரணம் அவரது மாமியார் தான் என்றும் அமித் அகர்வாலுக்கு தெரிய வந்தது
 
இந்த நிலையில் பெங்களூரில் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த அமித் அகர்வால், அங்கிருந்து தனது மாமியார் வீட்டுக்குச் சென்று அவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். இந்த நிலையில் மாமனார் திடீரென பக்கத்து அறையில் பூட்டி ஒளிந்து கொண்டதால் அவர் மட்டும் தப்பித்தார்.
 
இதனை அடுத்து இரண்டு கொலைகளை செய்த விவாகரத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துவிட்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மனைவி மற்றும் மாமியாரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அவர் தனது சட்டைப்பையில் வைத்திருந்த தற்கொலைக்கான கடிதத்தையும் கைப்பற்றினார்கள்
 
விவாகரத்து தரவில்லை என்ற ஆத்திரத்தால் மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்த வாலிபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தம்பதிக்கு 10 வயது மகள் ஒருவர் இருக்கிறார் என்பதும், அவர் தற்போது மாமனாரின் ஆதரவுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது