திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 1 ஆகஸ்ட் 2018 (08:26 IST)

சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிய வாலிபர் மரணம்

சார்ஜ் ஏறும்போதே செல்போனில் பேசிய நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்போனை சார்ஜ் போட்டபடி பயன்படுத்தாதீர்கள் அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என எவ்வளவு தான் விழுப்புணர்ச்சி செய்தாலும் பலர் இதனை கேட்பதில்லை. சார்ஜ் போட்டபடியே மற்றவரிடம் பேசுவது, கேம் ஆடுவது என செய்து பலர் உயிரை இழக்கிறார்கள்.
 
ஆந்திர மாநிலம்  வகுபள்ளி கிராமத்தை சேர்ந்த மஸ்தான் ரெட்டி(32) என்பவர் வீட்டில் சார்ஜ் போட்டபடியே செல்போனில் பேசியுள்ளார். அப்போது திடீரென செல்போன் வெடித்து சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். 
இந்த சம்பவத்தை மனதில் வைத்து இனியாவது மக்கள் இவ்வாறு செல்போனில் சார்ஜ் போட்டபடியே அதனை பயன்படுத்த வேண்டாம் என காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.