1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 1 ஆகஸ்ட் 2018 (09:42 IST)

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை

பீகாரில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக களமிறங்கிள்ளனர். 
பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மூடும்படி அரசு எவ்வளவு தான் கூறினாலும் இதனை பலர் கேட்பதில்லை. இதனால் விவரம் அறியாத குழந்தைகள் அதில் தவறி விழுந்து உயிரிழக்க நேரிடுகிறது.
 
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில்  3 வயது பெண் குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலிருந்த 110 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டது. உடனடியாக இதுகுறித்து மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர், குழந்தையை மீட்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.