1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 16 ஜூன் 2018 (15:02 IST)

பதவி உயர்வுக்காக ஓட்டப்போட்டியில் பங்கேற்ற ஹெட் கான்ஸ்டபிள் மரணம்

ராஜஸ்தானில் பதவி உயர்வுக்காக ஓட்டப்போட்டியில் பங்கேற்ற ஹெட் கான்ஸ்டபிள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுஷில் என்பவர் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் ஹெட் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்தார். 
 
இந்நிலையில் நேற்று துணை சப்-இன்ஸ்பெக்டருக்கான ஓட்டப்போட்டி நடைபெற்றது. துணை சப்-இன்ஸ்பெக்டராக ஆக விரும்பிய சுஷில் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு ஓடத் தொடங்கினார். ஆனால் சிறிது சேர்ந்த்தில் அவர் மயங்கி விழுந்தார்.
 
உடனடியாக சுஷில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுஷிலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பதவி உயர்வுக்காக ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட ஹெட் கான்ஸ்டபிள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.