நகை கடையில் துப்பாக்கிச் சூடு.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

Last Updated: ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (11:37 IST)
உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு நகை கடையில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் சிசிடிவி காட்சிகளாக வெளியாகியுள்ளன.

உத்தர பிரதேசம் முசாஃபர்நகரில் சிவில் லைன் பகுதியில் பிரபல நகை கடை ஒன்று உள்ளது. அந்த நகை கடை உரிமையாளருக்கும் அவரது அண்டை வீட்டுக்காரருக்கும் சில நாட்களுக்கு முன்பு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆதலால் அவரும் அவரது இரு மகன்களும் நேற்று நகை கடைக்குள் நுழைந்து அனைத்து பொருட்களையும் தூக்கி போட்டு உடைத்து அந்த நகை கடை உரிமையாளரையும் அங்கு இருந்தவர்களையும் தாக்கியுள்ளனர். மேலும் அந்த அண்டை வீட்டுக்காரர் துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்டை வீட்டுக்காரரையும் அவரது மகன்கள் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இச்சமபவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

source ANI


இதில் மேலும் படிக்கவும் :