செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 19 ஜூலை 2018 (21:46 IST)

பிக்பாஸ் வீட்டில் அனாதை குழந்தைகள்: செண்டிமெண்ட் பிழியும் வீடியோ

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களை தவிர அவ்வபோது விருந்தினர்களும் வந்து போட்டியை விறுவிறுப்பாக முயற்சித்து வருகின்றனர். முதலில் ஓவியாவில் தொடங்கி அதன் பின்னர் 'கடைக்குட்டி சிங்கம்' படக்குழுவினர், சினேகன் என மாறி மாறி விருந்தினர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
 
இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குக் அனாதை குழந்தைகள் சிலர் வந்துள்ளனர். தங்கள் சோகக்கதையை  பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் அவர்கள் கூறும் நெகிழ்ச்சியான காட்சிகள் இன்றைய புரமோ வீடியோவில் உள்ளன.
 
குழந்தைகளின் கதையை கேட்டு மும்தாஜ் கண்கலங்குவது போன்றும், என்னோட அம்மா அப்பா சண்டை போட்டு பிரிஞ்சிட்டதால நான் அனாதை இல்லத்தில் இருப்பதாக ஒரு சிறுவன் கூறும்போது பாலாஜி கண்ணீர் விடும் செண்டிமெண்ட் பிழியும் காட்சியும் இன்றைய புரமோ வீடியோவில் உள்ளது.