டெல்லியில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

Last Modified புதன், 6 டிசம்பர் 2017 (22:34 IST)
இந்திய தலைநகர் டெல்லியில் சற்றுமுன்னர் நிலநடுக்கம் உணரப்பட்டதால் அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் டெல்லி மட்டுமின்றி
உத்ராஞ்சல் மாநிலத்தில் உள்ள ஒருசில பகுதியிலும் நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ராபிரயாக் என்ற பகுதியில் பதிவான நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :