1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 20 செப்டம்பர் 2018 (11:30 IST)

குட்டிகளைக் காப்பாற்ற நாகப்பாம்புடன் மல்லுக்கட்டிய நாய் - நெகிழ்ச்சி வீடியோ

தனது குட்டிகளை நாகப்பாம்பிடம் இருந்து மீட்க நாய் ஒன்று போராடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உலகத்தில் தாய் தந்தையரின் பாசத்திற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. இது மனிதர்கள் மிட்டுமில்லாது அனைத்து ஜீவராசிகளுக்குமே பொருந்தும். அதனை நிரூபிக்கும் வகையில் ஒடிசாவில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
 
ஒடிசா மாநிலத்தில் நாய் ஒன்று 7 குட்டிகளை ஈன்று அதனை பத்திரமாக பராமரித்து வந்தது. வெளியில் இரை தேட சென்றாலும் அவ்வப்போது தனது குட்டிகளை பாசமாக கவனித்து வந்தது அந்த நாய்.
 
இந்நிலையில் நேற்று நாயின் குட்டிகள் இருக்கும் இடத்தில் ஒரு நாகப்பாம்பு புகுந்தது. இதனைப் பார்த்த தாய் நாய், குட்டிகளைப் பாதுகாக்க பாம்புடன் ஆக்ரோஷமாக சண்டையிட்டது. நாயின் அலறல் சத்தம் கேட்டு வந்த பகுதி மக்கள் நாயின் பாசப் போராட்டத்தை வீடியோவாக எடுத்தனர்.
 
தாய் நாய் கடுமையாக முயற்சி செய்தும், நாகப்பாம்பு 2 நாய்க் குட்டிகளை கொன்றுவிட்டு சென்றது. இந்த பாசப் போராட்டக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.