புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 மே 2023 (14:52 IST)

தூக்கிலிடுவதற்கு பதில் வலி குறைந்த மரண தண்டனை: மத்திய அரசு தகவல்..!

தூக்கில் இடுவதற்கு பதிலாக வலியில்லாத அல்லது வலி குறைந்த மரண தண்டனை குறித்து பரிசீலனை நடந்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 
உலகின் பல நாடுகளில் மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் இன்னும் மரண தண்டனை அமலில் உள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் தூக்கில் இடுவது என்பது கொடுமையான மரணம் என்றும் தூக்கில் இடப்படுபவர் மிகுந்த வலியுடன் தனது உயிரை இழப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வரும் நிலையில் வலி குறைந்த மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பாக ஆராய நிபுணர் குழு அமைக்க பரிசீல்த்து வருகிறோம் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 
 
தூக்கில் இடுவதற்கு பதில் மாற்று வழியில் மரண தண்டனை நிறைவேற்றுவது குறித்து ஆராய உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில் இந்த பதிலை மத்திய அரசு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva