1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 9 ஜூலை 2018 (13:44 IST)

யாரத்தான் நம்புறது? பெற்ற மகளின் தோழியை பலாத்காரம் செய்த தந்தை

ஹரியானாவில் தந்தை ஒருவர் தனது மகளின் தோழியை பலாத்காரம் செய்த அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாட்டில் பெண்கள் மீதான பாலியல் இச்சைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசும் எவ்வளவு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், பாலியல் குற்றங்களை செய்யும் அயோக்கியன்கள் தொடர்ந்து தங்களது லீலைகளை தொடர்ந்து வருகின்றனர்.
 
இந்நிலையில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபரின் மகள் 2-ம் ஆண்டு சட்டப்படிப்பு படித்து வந்தார். அவருக்கு 3 வயதிலிருந்தே நெருங்கிய தோழி ஒருவர் உள்ளார். அந்த தோழி பல சமயம் அந்த பெண்ணின் வீட்டில் தங்கியிருக்கிறார்.
 
சமீபத்தில் அந்த தொழிலதிபர் தன் மகளையும் அவரது தோழியையும், ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் இருவரையும் பலவந்தப்படுத்தி குடிக்க வைத்துள்ளார்.
பின் அவர்கள் மூவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். தொழிலதிபரின் பெண்ணும் அவரது தோழியும் ஒரு அறையில் தூங்கியுள்ளனர். அதிகாலையில் அந்த தொழிலதிபர், தன் மகளின் அறைக்கு சென்று அவரது தோழியை தன் அறைக்கு அழைத்து வந்து பலவந்தமாக கற்பழித்துள்ளார்.
 
இதனால் அதிர்ந்துபோன அந்த பெண், உன் அப்பா என்னை கற்பழித்துவிட்டார் என தனது தோழியிடம் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து தன் பெற்றோரிடமும் கூறியுள்ளார் அந்த பெண். அதிர்ந்துபோன தோழியும், அந்த பெண்ணின் பெற்றோர்களும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
தன் தந்தை மீது நடவடிக்கை எடுத்து அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என தொழிலதிபரின் மகள் கேட்டுக்கொண்டுள்ளார்.