திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 ஜூலை 2018 (16:04 IST)

உறவின் உச்சகட்டத்தில் பிரிந்த இளம்பெண்ணின் உயிர் : காதலன் மீது வழக்குப்பதிவு

இந்தியாவை சுற்றிப்பார்க்க மும்பை வந்த போது, உறவின் உச்சகட்டத்தில் இளம்பெண்ணின் உயிர் பிரிந்த வழக்கில் இஸ்ரேலை சேர்ந்த வாலிபர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 
கடந்த வருடம் மார்ச் மாதம் இஸ்ரேலை சேர்ந்த ஓரிரன் யாகோவ்(23) தனது 20 வயது காதலியுடன் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார். அப்போது மும்பை வந்த ஜோடி, கொலாபா பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கி, மும்பையின் பல பகுதிகளுக்கும் சென்று சுற்றிப்பார்த்துள்ளனர்.
 
அதன்பின் இரவு ஹோட்டலுக்கு திரும்பிய அவர்கள் உறவில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஓரிரானின் காதலி மூச்சு விட சிரமப்பட்டு படுக்கையிலேயே இறந்து போனார். அவர் திடீரென மயங்கி விட்டதாக கூறி, ஓட்டல் நிர்வாகத்திற்கு ஓரிரான் தகவல் கொடுத்தார். அதன் பின் அப்பெண்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
 
அதாவது, ஓரிரான் அந்த பெண்ணுடன் தீவிரமாக உடல் உறவில் ஈடுபட்ட போது, அவரது கழுத்த இறுக்கமாக பிடித்துள்ளார். அதில், மூச்சு விட சிரமம்ப்பட்டே அவர் இறந்துள்ளார் என்பது பிரேத பரிசோதனையில் தெரிவந்துள்ளது.
 
இந்நிலையில், தற்போதுதான் ஓரிரான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், விசா முடிந்து அவர் பல மாதங்களுக்கு முன்பே இஸ்ரேலுக்கு சென்றுவிட்டார். எனவே, அவரை கைது செய்வதில் மும்பை போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.