வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 3 ஜூன் 2023 (21:40 IST)

ஒடிஷாவில் ரெயில் விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

odisha
ஒடிஷாவில் ரெயில் விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷாவில் நேற்று இரவில் பெங்களூரு- ஹவுரா சூப்பர் பாஸ் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்- சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், மற்றும் சரக்கு ரயில் 3 ரயில்களும் விபத்தில் சிக்கியது. இதில்,  288 பேர் பலியாகியுள்ளனர். 900 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அதேபோல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் பார்வையிட்டனர்.

ஒடிஷாவின் பாலசோர் பகுதியில் இருந்து ரயில் விபத்தில் காயமடைந்த பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று கிளம்பியது.

அப்பேருந்து மேற்கு வங்காளத்தின் மேதினிப்பூர் நகரில் செல்லும்போது, அங்கு நின்றிருந்த வேன் மீது விபத்தில் சிக்கியது.

இப்பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாககவும், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.