செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 6 டிசம்பர் 2018 (09:09 IST)

தம்பி மீது தீராத பாசம்: அண்ணன் செய்த காரியத்தால் சோகத்தில் மூழ்கிய கிராமம்

மகாராஷ்டிராவில் தம்பி இறந்த துக்கத்தில் அண்ணனும் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மகாராஷ்டிராவை சேர்ந்தவர் சச்சின் சாவ்ரே. இவரது தம்பி சுபம் சாவ்ரே. இருவரும் அண்ணன் தம்பியை தாண்டி இணை பிரியா தோழர்களாய் இருந்தனர். சுபம் சாவ்ரே கல்லூரியில் படித்து வந்தார்.
 
இந்நிலையில் கல்லூரிக்கு சென்ற சுபம் சாவ்ரே, ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்து மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தம்பியின் மரண செய்தியைக் கேட்ட சச்சினின் உயிரும் துக்கத்தில் பிரிந்தது.
 
இந்த இரு சகோதரர்களின் இந்த திடீர் மறைவு அவர்களின் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.