ஸ்தம்பித்த சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தை நோக்கி அதிமுகவினர் பேரணி

Deepa
Last Updated: புதன், 5 டிசம்பர் 2018 (11:04 IST)
ஜெயலலிதாவின் 2ஆம் நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை நோக்கி அமைதி பேரணி நடந்தி வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று, பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார்.
 
இன்று அவரது இன்று இரண்டாவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதற்காக அவரது நினைவிடத்தில் பூக்கள் அலங்கரிக்கப்பட்டு காலை முதலே பல்வேறு மக்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
eps
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, உள்ளிட்ட பலர் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், கட்சிப் பிரமுகர்களும், தொண்டர்களும் கருப்பு சட்டை அணிந்துகொண்டு வாலாஜா சாலையிலிருந்து ஜெயலலிதா நினைவிடத்தை நோக்கி அமைதி பேரணியை நடத்தி வருகின்றனர். இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் ஜெ. நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்த இருக்கின்றனர்.

இதையடுத்து ஜெ நினைவிடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :