திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 23 டிசம்பர் 2017 (14:04 IST)

மாணவர்கள் முதியவரை தாக்கி ரூ.2,300 திருட்டு; சீரழிந்து வரும் மாணவர் சமுதாயம்

முதியவரை தாக்கி பணத்தை திருடிச் சென்ற பள்ளி மாணவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி(61). இவர் காளியம்மன் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரின் எதிரே வந்த மூன்று பள்ளி மாணவர்கள் முதியவரிடம் பணம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் தர மறுத்துள்ளார். இதையடுத்து அந்த மாணவர்கள் முதியவரிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இருப்பினும் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர்கள் முதியவரை கத்தியால் குத்திவீட்டு அவரிடமிருந்த இரண்டாயிரத்து முன்னூறு ரூபாயை திருடிச் சென்றனர். படுகாயமடைந்த முதியவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.