1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (09:05 IST)

மகாரஷ்டிர பாஜக துணைத்தலைவர் சாலைவிபத்தில் பலி

மகாரஷ்டிர பாஜக துணைத்தலைவர் சாலைவிபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாரஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் பாஜக துணைத்தலைவராக குருநாத் வாமன் லாஸ்னி இருந்து வந்தார்.
 
இந்நிலையில் பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த குருநாத் வாமன் லாஸ்னி, காரில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு டிராவல்ஸ் வண்டி கட்டுப்பாட்டை இழந்து குருநாத் காரின் மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில், குருநாத் சம்பவ இடத்திலே பலியானார்.
 
விபத்தை ஏற்படுத்திய டிராவல்ஸ் டிரைவர் தலைமறைவானார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குருநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவாக உள்ள டிராவல்ஸ் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.