வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 21 ஜூலை 2018 (15:28 IST)

உயிர் பிரியும் நேரத்திலும் 43 பேரின் உயிரை காப்பாற்றிய டிரைவர்

கேரளாவில் பஸ் டிரைவர் ஒருவர் உயிர் பிரியும் நேரத்திலும் 43 பேரின் உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த பஸ் டிரைவரான மது நேற்றிரவு கோட்டயத்திலிருந்து மலப்புரத்திற்கு 43 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றார்.
 
திடீரென மதுவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் நெஞ்சைப் பிடித்தவாறு வண்டியை தாறுமாறாக ஓட்டினார். உள்ளே பயணித்த பயணிகள் அலறினர். உடனடியாக நிலைமையை சுதாரித்த மது,  உடனே ஹேண்ட் பிரேக்கை பிடித்து பஸ்சை நிறுத்தினார். 
 
மது ஸ்டியரிங்கில் தலையை சாய்த்தபடி உயிரிழந்து கிடந்தார். உயிர் போகும் நிலைமையிலும், பயணிகளின் உயிரை காப்பாற்றிய மதுவின் உடலுக்கு பலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.