வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 21 ஜனவரி 2019 (15:52 IST)

96 மார்க் எடுத்து, 96 வயதில் தூதரான பாட்டி...

கேரளாவில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அங்கு 100 எழுத்தறிவைக் கொண்டுவருவதில் கேரள அரசு அக்‌ஷரலக்‌ஷம் என்ற கல்வியறிவு திட்டத்தின் வாயிலாக நல்ல முயற்சிகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில் படிப்பறிவை தவறவிட்ட பல பல முதியவர்களும்  இதில் சேர்ந்து கல்வியறிவு பெற்று வருகிறார்கள். முதியவர்களுக்கு தேர்வு பயிற்சி அளிக்கும் பொருட்டு 2086 மையங்களை கேரள அரசு ஏற்படுத்தியுள்ளது. 
 
இதில் கல்வி கற்கும் மூத்த மாணவியாக கார்த்திகாயினி என்ற பாட்டி இருக்கிறார். நடைபெற்ற தேர்வில் அவர் 98 % மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.சிறுவயதில் குடும்ப சூழ்நிலையின் காரணமாக படிப்பை பாதியில் விட்ட அவர்,தன் குழந்தைகளை வளர்க்க வீட்டு வேலைகள் செய்துள்ளார். 
 
மேலும் தன் 60 வயது மகளிடம் இருந்துதான் படிக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டதாகவும் கூறினார். இவரது மகள் கூட சில வருடத்திற்கு முன்னர்தான் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
 
கணினியை எப்படி இயக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்த கார்த்திகாயினி அம்மாவுக்கு கேரள அமைச்சர் சி. ரவீந்தரநாத் லேப்டாப் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.