செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 மார்ச் 2018 (19:34 IST)

சமந்தா குறித்த வதந்திக்கு தெலுங்கானா அமைச்சர் வைத்த முற்றுப்புள்ளி

நடிகை சமந்தா நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார் என்பதும் சமூக சேவைக்கு அவர் ஒரு பைசா கூட பணம் பெற்று கொள்வதில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தின் கைத்தறி ஆடைகளின் விளம்பர தூதராக இருக்கும் சமந்தா, கிராமம் முதல் நகரங்கள் வரை சென்று கைத்தறி ஆடை குறித்த விழிப்புணர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார். இதற்கு அவர் எந்தவித சன்மானமும் தெலுங்கானா அரசிடம் இருந்து பெற்று கொள்ளவில்லை. ஆனால் ஒருசிலர் தெலுங்கானா அரசிடம் இருந்து ஒரு பெரிய தொகையை சமந்தா பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் கூறி வந்தனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்த தெலுங்கானா அமைச்சர் கே.டி.ஆர் கூறியதாவது: சமந்தா கைத்தறி ஆடை விளம்பர தூதர பணிக்காக ஒரு பைசாகூட சன்மானமாக பெறவில்லை. இதை ஒரு சமூக சேவை போன்றே இலவசமாக செய்து வருகிறார் என்று கூறி வதந்திகளூக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இப்போது நெட்டிசன்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.