1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2022 (19:52 IST)

அரசு கொடுத்த ரூ.1.05 கோடியில் ரூ.92 லட்சத்தை ஆன்லைனில் இழந்த நபர்!

rummy
ரூ 1.05 கோடி அரசு இழப்பீடாக கொடுத்த பணத்தில் 92 லட்ச ரூபாய் ஆன்லைன் சூதாட்டத்தில் விவசாயி மகன் ஒருவன் இழந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அரசு தொழிற்சாலை ஒன்று கட்டுவதற்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த சீனிவாச ரெட்டி என்பவருக்கு இழப்பீடாக ரூ 1.05 கோடி வழங்கப்பட்டிருந்தது. இந்த பணத்தை அவர் தனது வங்கியில் டெபாசிட் செய்து இருந்த நிலையில் அந்த பணத்தை எடுத்து அவரது மகன் கொஞ்சம் கொஞ்சமாக ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.
 
கிட்டத்தட்ட அவர் 92 லட்சத்தை அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தைப் போலவே ஆந்திராவிலும் மிகப் பெரிய தொகையை ஆன்லைனில் இழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran