திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2024 (18:35 IST)

பாஜக அரசுக்கு எதிரான நீதியின் வெற்றி அடையாளம்: பில்கிஸ் பானு போராட்டம் குறித்து ராகுல் காந்தி

rahul gandhi
பாஜக அரசுக்கு எதிரான நீதியின் வெற்றி அடையாளம் என பில்கிஸ் பானு போராட்டம் குறித்து ராகுல் காந்தி  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
பில்கிஸ் பானுவின் தொடர் போராட்டம், திமிர் பிடித்த பாரதிய ஜனதா அரசுக்கு எதிரான நீதியின் வெற்றிக்கான அடையாளம். தேர்தல் ஆதாயங்களுக்காக நீதியை கொலை செய்யும் போக்கு என்பது ஜனநாயக அமைப்புக்கு மிகவும் ஆபத்து. இன்று சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குற்றவாளிகளின் ஆதரவாளர் யார் என்பதை மீண்டும் ஒருமுறை நாட்டுக்கு எடுத்துரைத்துள்ளது என கூறியுள்ளார்.
 
ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி தனது சமூக வலைத்தளத்தில், ‘இந்த உத்தரவின் மூலம், பாரதிய ஜனதா கட்சியின் பெண்களுக்கு எதிரான போக்கு வெளிப்பட்டுள்ளது. நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கை இந்த தீர்ப்புக்கு பிறகு மேலும் வலுப்பெறும். பில்கிஸ் பானு தனது போராட்டத்தைத் துணிச்சலுடன் தொடர வாழ்த்துகள்" என கூறியுள்ளார்.
 
Edited by Mahendran