செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2020 (18:20 IST)

65 நாட்களுக்கு காணாமல் போகப் போகும் ஆர் ஜே பாலாஜி – ஏன் தெரியுமா?

ஆர் ஜே பாலாஜி ஐபிஎல் தமிழ் வர்ணனையாளராக பணியாற்ற மும்பைக்கு 65 நாட்கள் சென்று தங்கவுள்ளார்.

ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். சமீபகாலமாக பிராந்திய மொழி ரசிகர்களைக் கவரும் விதமாக அந்தந்த மொழிகளிலேயே வர்ணனை இடம்பெறும் வண்ணம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்பி வருகிறது.

அந்த வகையில் தமிழ் வரணனை குழுவில் இடம்பெற்றிருந்த திரைப்பட நடிகர் ஆர் ஜே பாலாஜி ஐபிஎல் வர்ணனைக்காக மும்பை செல்ல உள்ளார். அங்கு தங்கி 65 நாட்களுக்கு வர்ணனையை முடித்து விட்ட அதன் பின்னரே சென்னைக்கு வர உள்ளாராம். இதனால் அவரின் மூக்குத்தி அம்மன் பட வேலைகளை பரபரப்பாக முடித்து வருகிறார்.