1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 25 பிப்ரவரி 2021 (07:26 IST)

ஒரே நாளில் 8000 பேருக்கு கொரோனா பாதிப்பு: மீண்டும் மகாராஷ்டிராவில் லாக்டவுனா?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைய தொடங்கியது 
 
தற்போது தமிழகத்தில் தினமும் 400 முதல் 500 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் தினமும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி வந்தது 
 
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 800 பேருக்கு மகாராஷ்டிராவில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதுவரை 52 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்கள் என்றும் பொதுமக்கள் பொறுப்புடன் மாஸ்க் அணிதல் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது 
 
நேற்று ஒரே நாளில்கொரோனா  பாதிப்பால் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கொரோனா விதிமுறைகளை பொதுமக்கள் மீறினால் மீண்டும் மகாராஷ்டிராவில் லாக்டவுன் அறிவிக்கப்படும் என ஏற்கனவே அரசு எச்சரித்து இருந்த நிலையில் தற்போது 8800 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் வெகு விரைவில் லாக்டவுன் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது