திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 மார்ச் 2018 (12:42 IST)

செம்மரம் கடத்த சென்றதாக 84 தமிழர்கள் ஆந்திராவில் கைது

ஆந்திரா மாநிலத்தில் செம்மரம் வெட்டச் சென்றதாக 84 தமிழர்களை ஆந்திர மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
ஆந்திராவில் செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க ஆந்திர மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதற்கென்று தனிப்பிரிவு காவல் படையும் அமைத்துள்ளனர்.
 
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆஞ்சநேயபுரம் சோதனைச் சாவடிக்கு லாரி ஒன்று வேகமாக வந்துள்ளது. அதனை மடக்கி போலீசார் சோதனை செய்துள்ளனர். அந்த லாரியில் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் 84 பேர் இருந்துள்ளனர். அவர்களை போலீசார் செம்மரம் கடத்த வந்ததாக கூறி கைது செய்துள்ளனர். ஆனால், கைது செய்யப்பட்ட தமிழர்கள் நாங்கள் கூலி வேலை செய்யவதற்காக அந்த லாரியில் வந்ததாக கூறுகின்றனர்.
  
ஏற்கனவே ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 தமிழர்கள் கடப்பா மாநிலத்தில் மர்மமான முறையில் இறந்தது குறிப்பிடத்தக்கது.