செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (18:02 IST)

80 கி.மீ., சைக்கிளில் வந்து பதவியேற்ற எம்.எல்.ஏ

பஞ்சாப்  மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான  ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இதற்கான பதவியேற்பு விழாவில் குருதேவ் சிங்க் மான் என்பவர் 80 கிமீசைக்கிளில் வந்து பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

சமீபத்தில் பஞ்சாபில் நடைபெற்ற 117 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில்  ஆம் ஆத்மிகட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

பின்னர், பகவந்த் மான் ஆளுவர் பன்வாரரிலால் புரோஹித்தை சந்தித்து, ஆட்சியமைப்பதற்கு உரிமைகோரினார்.

இப்பதவி ஏற்பாடு விழாவானது பகவத் சிங்கின் கிராமமான கட்கட் களானில்  நேற்று முன்தினம்  நடைபெற்றது.